இந்த நாளில்...

ஆகஸ்ட் 20 -  'இன்போசிஸ்' நாராயண மூர்த்தி பிறந்த தினம்

இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் பெருமை மிகு அடையாளங்களுள்  ஒன்றாக விளங்கும்  'இன்போசிஸ்' நிறுவனத்தை தொடங்கிய என்.ஆர்.நாராயண் மூர்த்தியின் பிறந்த தினம் இன்று.

பாவலர் மலரடியான்

இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் பெருமை மிகு அடையாளங்களுள்  ஒன்றாக விளங்கும்  'இன்போசிஸ்' நிறுவனத்தை தொடங்கிய என்.ஆர்.நாராயண் மூர்த்தியின் பிறந்த தினம் இன்று.

இவர் 1946 ஆம் ஆண்டு பிறந்தார்.மைசூர் பல்கலைக்கழகத்திலிருந்து பி.ஈ பட்டம் பெற்ற  அவர், கான்பூர்  ஐ.ஐ.டி யில் இருந்து எம்.டெக் பட்டம் பெற்றார். 1981 ஆம் ஆண்டு தன்னுடன் பணிபுரிந்த  நண்பர்களுடன் இணைந்து 'இன்போசிஸ்' நிறுவனத்தை தொடங்கலாம் என்று நாராயணமூர்த்தி முடிவு செய்த போது  அவர் கையில் பெரிய  சேமிப்பு என்று எதுவும் இல்லை. அச்சமயம்  டாடா நிறுவனத்தில் என்ஜினியராக பணியபுரிந்த அவரது மனைவி சுதா சேமித்து வைத்திருந்த 10000 ரூபாயை முதலீடாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டதுதான் 'இன்போசிஸ்' நிறுவனம்.

இன்று ஒரு பெரிய நிறுவனமாக வளர்ந்து பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து, இந்தியாவின் புகழ் மிக்க அடையாளமாக விளங்கி வருகிறது.

அந்த நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலராக பணிபுரிந்து வந்த நாராயணமூர்த்தி, 2006-ஆம் ஆண்டு, அந்த பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! உத்தரகோசமங்கை கோயில் மரகத நடராஜர் அபிஷேகம்!

அணுமின் உற்பத்தியில் தனியாருக்கு அனுமதி: நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

அரசு கடன் பத்திர வழக்கு: கேரள முதல்வருக்கு எதிரான அமலாக்கத் துறை நோட்டீஸுக்குத் தடை - கேரள உயா்நீதிமன்றம் உத்தரவு

3,710 மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகை

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

SCROLL FOR NEXT